தமிழக பாஜக மாநில தலைவரும், மூத்த அரசியல்வாதியான நயினார் நாகேந்திரனை, அண்ணாமலை வேண்டும் என்றே ஓரம்கட்டி விட்டு ‘தான் தான் பெரிய ஆளு’ என்று காட்டிக்கொள்ள முயற்சித்து வருவதாக பாஜகவினரும், அதன் கூட்டணி காட்சியினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.
அண்ணாமலையின் கோல்மால் வேலைகள்
அண்ணாமலை தற்போது செய்து வரும் வேலைகளை பார்ப்பதற்கு முன்னால், அவர் செய்த சில கோல்மால் வேலைகளை பார்ப்போம். வேலூரில் செயல்பட்டு வந்த மிகவும் பிரலமான தங்கம் முதலீடு நிறுவனத்தை மிரட்டி அண்ணாமலை மூட வைத்ததாக அரசல் புரசலாக தகவல்கள் ரெக்கை கட்டிப் பறந்தன.
பாஜக மூத்த நிர்வாகிகளை ‘ஹனி ட்ராப்’ மூலம் சிக்க வைத்தது, கேமரா வைத்து தன் சொந்த கட்சியினரை பல்வேறு பிரச்னைகளில் சிக்க வைத்தது என அண்ணாமலையின் கோல்மால் பட்டியில் நீண்டு கொண்டே இருக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தின் போது பாஜகவினர் ரூ.4கோடி கடத்தப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் பெயரும் அடிப்பட்டது, அவர் தரப்பிடம் விசாரணையும் நடைபெற்றது. அதற்கு அண்ணாமலை தான் காரணம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அண்ணாமலையின் வார்-ரூம்
அரசியல்வாதிகள் வார்-ரூம் வைத்திருப்பது தற்போது பொதுவாக ஒன்றாக மாறி வருகிறது. இருப்பினும், தேர்தல் சமயத்தின் போது தங்கள் வார்-ரூமை ஆக்டிவாக வைத்திருப்பார்கள், செயல்பட வைப்பார்கள். ஆனால், தமிழக பாஜக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை மாதம் 30 நாட்களும் செயல்படும்படி வைத்திருப்பாராம்.
அண்ணாமலை மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் என்னவென்றால் அண்ணாமலை தனி வார்-ரூம் வைத்துள்ளார். தனக்கு வேண்டாத அரசியல்வாதிகளை தனது வார்-ரூம் மூலம் எதிர்கொள்வார். தன் சொந்த பாஜக கட்சியினரே, ஆனாலும் அவர்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிப்பதற்கு தனி குழுவையே அண்ணாமலை வைத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
நயினாரை தடுக்கிறாரா அண்ணாமலை ?
கடந்த சில மாதங்களுக்கு முன் தான், தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நெல்லை சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் ஆவார். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அனுபவம் உள்ளவர். நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், நாகர்கோவில் என சுற்று வட்டார பகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.
ஆனால் அண்ணாமலையோ ‘கொரோனா பேட்ச் ஸ்டூடண்ட் போல அரசியலுக்கு வந்தவர்’. கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்த எல்.முருகனுக்கு அடுத்து அண்ணாமலைக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்ற நாள்முதல் பல்வேறு சர்ச்சைகளும் வெடித்தது. இதனால் தமிழகத்தில் பாஜக என்ற கட்சியின் மீது மக்களுக்கு இருந்த நன்மதிப்பும் குறையத் தொடங்கியது. அந்த சமயத்தில் தான் தமிழகத்தில் வலுவாக இருந்த அதிமுக – பாஜக கூட்டணியும் முறிந்தது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளையும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்த நிகழ்வும் அரங்கேறியது.
ஆனால், இதை எல்லாம் பொருட்படுத்தாமல் ‘தான் மட்டும் வளர வேண்டும்’ என்ற நோக்கத்துடன் அண்ணாமலை செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் அரசியல் வட்டாரத்தில் உண்டு. அரசியலில் நுழைந்து ஒரு சில ஆண்டுகளேயானாலும் பல மூத்த தலைவர்களின் கடுமையான எதிர்ப்பை பெற்றுள்ளார் அண்ணாமலை.
ஓபிஎஸ், டிடிவி விலகிய விவகாரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ,பன்னீர்செல்வம் , அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், இதற்குப் பின்னால் அண்ணாமலையின் செயல்பாடு இருப்பதாக கிசு, கிசுக்கப்படுகிறது.
நயினார் எங்களை அழைக்கவில்லை, அமித்ஷாவை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கவில்லை, கூட்டணியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பில் முன் வைத்தாலும் இதெல்லாம் அண்ணாமலை விளையாட்டு என்றும் பேசப்படுகிறது.
நயினாரை ஓரம்கட்ட நினைக்கும் அண்ணாமலை
சமீபகாலமாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பேட்டிகள் செய்திகள் பத்திரிகைகளில், ஊடகங்களில் அவ்வளவாக வெளிவருவதில்லை. அதற்கு மாறாக பாஜக முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலையின் பேட்டிகள், செய்திகள் தான் ஊடகங்கள்; பத்திரிகைகளில் அதிகம் இடம் பெறுகின்றன.
இது ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் வார்-ரூம் டீமின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. இவர்கள் கூட்டணியில் உள்ள அதிமுக நிர்வாகிகளையும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக மாதந்தோறும் லட்சக்கணக்கில் அண்ணாமலை பணம் செலவு செய்வதாகவும் பாஜக தொண்டர்கள் தரப்பில் பேசப்படுகிறது.
தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனின் கட்சி ரீதியான மற்றும் அரசியல் ரீதியான செயல்பாடுகளை முடக்குவதற்கான வேலைகளை அண்ணாமலை தரப்பினர் ரகசியமாக கையில் எடுத்துள்ளதாகவும்; போதிய அரசியல் அனுபவம் இல்லாத அவர் தேசிய பாஜக தலைவராவதற்கு முயற்சிகள் எடுத்து வருவதாகவும், பாஜக தொண்டர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.
அண்ணாமலைக்கே ஆப்பு திரும்பும்!
இது எப்படியோ! “அண்ணாமலையின் செயல்பாடுகள் அனைத்தும் கட்சிக்கு எதிரானவை, இதெல்லாம் அரசியல் அநியாயம் என்று விமர்சிக்கப்பட்டாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தான் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார். நீண்ட கால அரசியல் அனுபவம் மிக்க, மக்கள் செல்வாக்கு உடைய நயினார் நாகேந்திரனை ஓரம் கட்ட நினைக்கும் அண்ணாமலையின் திட்டம் தோற்றுப் போகும். விரைவில் பாஜக கட்சியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவார்” என்றும் பாஜகவினர் மத்தியில் பேசிக்கிறாங்க.


