ரகசா புயல் காரணமாக சீனாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் , மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் 5 லட்சம் வீடுகள் இருளில் சிக்கித் தவிக்கின்றன.
ஆசியாவில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ரகசா புயல். தென் சீனக்கடலில் உருவான புயலுக்கு ரகசா என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த புயல் தைவான், பிலிப்பைன்சில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தைவானில் ஏற்பட்ட வெள்ளத்தால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 124 பேரை காணவில்லை. தமா கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பிலிப்பைன்சின் வடக்கே 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தைவானை உருக்குலைத்த இந்த புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் மணிக்கு 200 கி.மீட்டரில் இருந்து 230 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசியதால் குவாங்டாங் மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் அத்துடன். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


