இலங்கையில் உள்ள புகழ் பெற்ற புத்த மடாலயத்தில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் இந்தியர் உள்பட 7 புத்த பிக்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் உள்ள கொழும்பில் இருந்து 125 கி.மீ தொலைவில் நிகவெரட்டியாவில் புகழ்பெற்ற புத்த மடாலயம் உள்ளது. காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த மடாலயத்திற்கு உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த புத்த பிக்குகள் மற்றும் பயிற்சியாளர்கள் வருகை தருகின்றனர். தியானத்திற்கு புகழ்பெற்ற இந்த மடாலயத்திற்கு கேபிள் கார் மூலம் தான் பயணம் செய்ய முடியும்.
இந்த நிலையில், நேற்று இரவு கேபிள் கார் சென்று கொண்டிருந்த போது கேபிள் அறுந்து அதிவேகமாக கீழ்நோக்கிச் சென்ற பெட்டி தண்டாவளத்தில் இருந்து கீழே மரத்தில் விழுந்தது. இதில் 7 புத்த பிக்குகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் உள்ளனர்.
கேபிள் அறுந்து அதிவேகத்தில் கீழ்நோக்கி கேபிள் கார் விழுந்ததால் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. கேபிள் காரில் 13 துறவிகள் இருந்துள்ளனர். இருவர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். ஆனால், நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இறந்த ஏழு துறவிகளில் ஒருவர் இந்தியர், ஒருவர் ரஷ்யர், ஒருவர் ருமேனிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


