சென்னையில் சபரீசன் தந்தை வேதமூர்த்தி காலமானார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க..ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை. இவரது கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சபரீசன் மற்றும் செந்தாமரை குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சபரீசனின் தந்தை வேதமூர்த்தி வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரத்தை சேர்ந்தவர். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மருத்துவமனையில் வேதமூர்த்தி காலமானார்.

சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேதமூர்த்தியின் இறுதி சடங்குகள் நாளை (செப்டம்பர் 12) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை மறைவைத் தொடர்ந்து, மகன் சபரீசன், ஆஸ்திரியா நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related Posts

அன்புமணியை நீக்க டாக்டர் ராமதாஸ்க்கு அதிகாரமில்லை.- வழக்கறிஞர் பாலு பேட்டி

பாமகவில் இருந்து அன்புமணியை நீக்க டாக்டர் ராமதாஸ்க்கு அதிகாரமில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகனான பாமக தலைவர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதன்…

பாமகவில் இருந்து அன்புமணி அதிரடியாக நீக்கம்- ராமதாஸ் அறிவிப்பு!

பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகனான பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *