பாமகவில் இருந்து அன்புமணி அதிரடியாக நீக்கம்- ராமதாஸ் அறிவிப்பு!

பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகனான பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதன் காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17- ம் தேதி புதுச்சேரியில் நடந்த பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கைக்குழு சுமத்தியது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. அதன்பிறகு, அவருக்கு இரண்டாவது தடவையாக, செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து நோட்டீசிற்கு விளக்கம் தரவில்லை.

இந்த நிலையில், பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக தலைவர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார். அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என தெரிவித்துள்ள ராமதாஸ், அன்புமணி உடன் உள்ளவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்க தயார் எனவும் அறிவித்துள்ளார். தனி அணியைப் போல செயல்பட்டு வந்த அன்புமணி தனிகட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

அன்புமணியை நீக்க டாக்டர் ராமதாஸ்க்கு அதிகாரமில்லை.- வழக்கறிஞர் பாலு பேட்டி

பாமகவில் இருந்து அன்புமணியை நீக்க டாக்டர் ராமதாஸ்க்கு அதிகாரமில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகனான பாமக தலைவர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *