வன்முறை காடாக மாறிய நேபாளத்தில் அமைதி திரும்பட்டும்- பிரதமர் மோடி வலியுறுத்தல்!

நேபாளத்தில் அமைதி திரும்பவுது முக்கியம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்ய தவறிய இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து அரசுக்கு எதிராக நடைபெற்ற பொதுமக்களின் போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அமைச்சர்களின் வீடுகளை சூறையாடியதுடன் தீ வைத்தனர். மேலும் அரசு கட்டிடங்களையும் குறிவைத்து தீ வைத்து எரித்து வருகின்றனர். இந்த நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினமா செய்தார். அவரைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம் சரண் பவ்டெல் தங்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நேபாளத்தில் வன்முறை நீடித்து வரும் நிலையில், அங்கு அமைதி திரும்பவுது முக்கியம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளிட்டுள்ளார். அதில், “நேபாளத்தில் அமைதி, ஸ்திரதன்மை, செழிப்பு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இளைஞர்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. இளம் வயதினர் பலர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, அமைதியை கடைபிடிக்குமாறு நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

பகீர்… கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் குதித்த 4 பேரில் இருவர் சாவு

ஆந்திராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திரா மாநிலம் குப்பம் புதுப்பேட்டை ஏ.பி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மண…

சீனா எல்லை வழியாக இந்தியாவிற்கு ரூ.800 கோடி தங்கம் கடத்தல்- அதிர வைத்த அமலாக்கத்துறை

சீனாவிலிருந்து திபெத் வழியாக டெல்லிக்கு ரூ.800 கோடி மதிப்புள்ள 1,064 கிலோ தங்கம் கடத்தி வந்த மூன்று பேரை இந்தோ- திபெத் எல்லை காவல்துறை கைது செய்துள்ளது. லடாக்-சீன எல்லையில் ரூ.80 கோடி மதிப்புள்ள தங்கத்தை எடுத்துச் சென்ற 2 பேரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *