
நேபாளத்தில் அமைதி திரும்பவுது முக்கியம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்ய தவறிய இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து அரசுக்கு எதிராக நடைபெற்ற பொதுமக்களின் போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அமைச்சர்களின் வீடுகளை சூறையாடியதுடன் தீ வைத்தனர். மேலும் அரசு கட்டிடங்களையும் குறிவைத்து தீ வைத்து எரித்து வருகின்றனர். இந்த நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினமா செய்தார். அவரைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம் சரண் பவ்டெல் தங்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நேபாளத்தில் வன்முறை நீடித்து வரும் நிலையில், அங்கு அமைதி திரும்பவுது முக்கியம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளிட்டுள்ளார். அதில், “நேபாளத்தில் அமைதி, ஸ்திரதன்மை, செழிப்பு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இளைஞர்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. இளம் வயதினர் பலர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, அமைதியை கடைபிடிக்குமாறு நேபாளத்தில் உள்ள சகோதர சகோதரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.