திமுக பயத்தின் உச்சத்தில் இருக்கிறது- தவெக தலைவர் விஜய் தடாலடி!

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக பயத்தின் உச்சத்தில் இருப்பதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக தவெக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும், ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.

தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த திமுக அரசு நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்.

அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

அதிமுகவில் ஏற்பட்ட பிளவிற்கு திமுக தான் காரணம்… நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் திமுக தான் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செங்கோட்டையனை இயக்குவது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையா…

அதிகாலை துயரம்…. தோட்டத் தொழிலாளியை அடித்துக் கொன்ற காட்டுயானை!

கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி இன்று அதிகாலையில் வேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். நீலகிரி மாவட்டம், கூடலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *