கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்- அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி!

கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே சில மாதங்களாக முட்டல், மோதல் நடந்து வந்தது. இந்த நிலையில், தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செப்.5-ம் தேதி அறிவிப்பதாக செங்கோட்டையன் கூறினார்.

அதன்படி நேற்று காலை, செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், .அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலசோனையில் ஈடுபட்டார்.

இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த நிலையில் கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரா? – இபிஎஸ் பேச்சுக்கு ஜான் பாண்டியன் கண்டனம்

மதுரை விமான நிலையத்திற்கு பெயர் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என தமிழ்நாடு…

வைகோ செய்தது ஜனநாயக படுகொலை- மல்லை சத்யா கொந்தளிப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தது ஜனநாயகப் படுகொலை என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார் மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து மல்லை சத்யாவை நீக்கி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *