
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக நிர்வாகியான நடிகர் சரத்குமார் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்ல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர், நடிகர் விஜய்யின் தவெக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளின் உயர்மட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தமிழக பாஜகவில் நிலவும் கோஷ்டி பூசலைக் கண்டித்துள்ளார். அத்துடன் போட்டியிடும் தொகுதிகள், களநிலவரம் உள்ளிட்ட விஷயங்களை நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை செய்தார்.
இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக நிர்வாகியான நடிகர் சரத்குமார் சந்தித்து பேசியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் ஐக்கியமான சரத்குமாருக்கு கட்சியின் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், அமித்ஷாவை சந்தித்த சரத்குமார் பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதற்காக அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தெரிகிறது.