மோடியின் கெத்து குறைகிறது… காங்கிரஸின் கை ஓங்குகிறது- இந்தியா டுடே கருத்துக் கணிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

தேசத்தின் மனநிலை (Mood of the Nation) என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த இரண்டு கருத்துக் கணிப்பின் முடிவுகளை தற்போது இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்குவதாக கருத்துக் கணிப்பு வெளியாகிறது.

கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பாஜக தனித்து 281 இடங்களையும், எதிர்க்கட்சிகள் 184 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிய வந்தது. அதே இந்தியா டுடே இந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 260 இடங்களும், எதிர்க்கட்சிகளுக்கு 186 இடங்களும் ,காங்கிரஸ் கட்சிக்கு 97 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மோசம் என்ற கருத்துக் கணிப்பும் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் கடந்த கருத்துக் கணிப்பில் மோடியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக 62 சதவீதம் பேரும், மோடியின் செயல்பாடுகள் மோசம் என 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மோடியின் செயல்பாடுகள் சிறப்பு என 58 சதவீதம் பேரும், மோடி அரசு செயல்பாடுகள் மோசம் என 26 சதவீதம் பேரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடுகள் சிறப்பு என கடந்த பிப்ரவரி மாதம் 62.1 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பில் 54.2 சதவீதம் பேர் மட்டுமே, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல்பாடு சிறப்பு என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மத்திய அரசு மீதான அதிருப்தி 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா டுடே சி வோட்டர் நிறுவனம் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பை எடுத்தது.

Related Posts

‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவனை கொன்று சமையலறையில் புதைத்த மனைவி!

‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென…

ஷாக்…மாமியார் வீட்டில் தூணில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட மருமகன்!

மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *