22 பேரும் குற்றவாளிகள்- ஆம்பூர் கலவர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேரும் குற்றவாளிகள் என திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா(25). இவர் பள்ளிகொண்டாவில் தோல் காலணி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் பவித்ரா காணாமல் போனார். அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது கணவர் பழனி, ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக பள்ளிகொண்டா காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளர் பிரேம்ராஜ், பவித்ராவுடன் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஷமீல் அஹமத்(26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது ஷமீல் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையில் விசாரணையில் இருந்த ஷமீல் அஹமதை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எழுதி வாங்கிக் கொண்டு உறவினர்கள் வசம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 500-க்கும மேற்பட்டோர் 2015 ஜூன் 27–ம் தேதி ஆம்பூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்னர். ஷமீல் அஹமதுவை தாக்கிய காவல் ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஊர்வலமாகச் சென்று சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 71 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட காவல் வாகனங்களும் சேதமடைந்தது. ஆம்பூர் கலவரம் என்று சொல்லப்படும் இந்த சம்பவத்தில் 25 லட்சம் மதிப்புடைய அரசு சொத்துக்கள் சேதமாகின.

இந்த சம்பவம் தொடர்பாக 191 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 118 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றவர்களை விடுதலை செய்துள்ளது. இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Posts

டெல்லி கார் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்க வேண்டாமா?- திருமாவளவன் கேள்வி!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே பொறுப்பேற்க வேண்டும் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

டெல்லியில் கார் குண்டு வெடித்து 10 பேர் பலி- அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளே காரணம் என்று தெரிய வந்துள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே நேற்று இரவு 6.50 மணியளவில் காரில் குண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *