இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும்…. எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

ஒரு முன்னாள் முதல்வர் ஆம்புலன்ஸ் டிரைவர் பெயரை நோட் பண்ணு, வண்டி நம்பரை நோட் பண்ணு, என்று மிரட்டல் தொனியில் பேசுவதை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் நேற்று அவர் பிரசாரம் செய்தார். பேருந்து நிலையம் அருகே அவர் பேசிக்கொண்டிருந்த போது, அவ்வழியே ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.

அதைப் பார்த்த டென்சனான எடப்பாடி பழனிசாமி, கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்ய முடியாது. தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது. ஆம்புலன்ஸில் நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. ஆம்புலன்ஸ் வந்தால் அதை ஓட்டி வரும் டிரைவரே நோயாளியாக அந்த வாகனத்திலே ஏற்றிச் செல்லப்பட வேண்டி இருக்கும் என்று எச்சரித்தார்.

இதையடுத்து அந்த ஆம்புலன்ஸை அதிமுக தொண்டர்கள் தாக்க முயன்றனர். அவர்களைத் தடுத்த எடப்பாடி பழனிசாமி, வாகன எண்ணை மட்டும் குறித்துக் கொண்டு அவரை அனுப்பி விடுங்கள் என்று கூறினார். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம் என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளிக்கையில், “எடப்பாடி பழனிச்சாமி மக்களின் ஆதரவைத் திரட்ட பெரும்பாலும் பிரதான சாலைகளில் செல்கிறார். தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 1330வரை உள்ளன. இதன் மூலம் விபத்து ஏற்படும்போதோ, நோய் தீவிரம் அடையும் போதோ விரைந்து சென்று காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ் வரும் வழிகளில் கூட்டத்தை போட்டு விட்டு நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் செல்கிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழிக்கு ஏற்ப ஆம்புலன்ஸை பார்த்தால் அவருக்கு வேற என்னவெல்லாமோ தோன்றுகிறது.

மருத்துவத் துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் மருத்துவர்களை மிரட்டல் தொனியில் அவர் பேச்சு உள்ளது. ஒரு முன்னாள் முதல்வர் ஆம்புலன்ஸ் டிரைவர் பெயரை நோட் பண்ணு, வண்டி நம்பரை நோட் பண்ணு, என்று மிரட்டல் தொனியில் பேசுவதை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இது பொதுமக்களிடையே அவருக்கு கூடுதல் எதிர்ப்பை உருவாக்கி தரும்” என்றார்.

Related Posts

தவெக தலைவர் விஜய் சிங்கம் தான், ஆனால்,: சீமான் கிண்டல்!

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக…

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *