ஷாக்…. வெளியான முதல் நாளே இணையத்தில் வெளியானது ‘கூலி’

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் திரையரங்கில் வெளியான நாளன்றே இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் , இசையமைத்துள்ளார். ‘கூலி’ திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் ‘கூலி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே ‘கூலி’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts

நடிகை மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் அனுமதி- போலீஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் மனநல மருத்துவமனையில் நடிகை மீரா மிதுன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்தவர் மீரா மிதுன்(34). நடிகையும், மாடல் அழகியுமான இவர் சில தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார். பிக் பாஸ் தமிழ் சீசனிலும் பங்கேற்றார். இந்த…

28 ஆண்டுகளுக்குப் பின் ரீ – என்ட்ரி கொடுக்கும் டிஸ்கோ சாந்தி!

28 ஆண்டுகளுக்குப் பின் புல்லட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்ட்டிற்கு டிஸ்கோ சாந்தி அடியெடுத்து வைத்துள்ளார். பழம்பெரும் நடிகர் ஆனந்ததின் மகளான டிஸ்கோ சாந்தி 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *