சுதந்திர தினவிழா கோலாகலம்- 12-வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றினார்.

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக இன்று தேசியக் கொடியேற்றினார். செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், செங்கோட்டையில் முப்படைகள் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள் வரவேற்று செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட 5 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படை, மத்திய போலீஸ் படை மற்றும் டெல்லி போலீஸார் என 15,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பேசுகையில், இன்று, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து, நாட்டை வழிநடத்தி, நாட்டிற்கு வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுக்கு எனது மரியாதைக்குரிய மரியாதையை செலுத்துகிறேன். இன்று நாம் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறோம்.

இந்திய அரசியலமைப்பிற்காக தியாகம் செய்த நாட்டின் முதல் சிறந்த மனிதர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. அரசியலமைப்பிற்காக தியாகம் செய்தவர். 370வது பிரிவின் சுவரை இடிப்பதன் மூலம் ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற மந்திரத்தை உயிர்ப்பித்தபோது, டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு உண்மையான அஞ்சலி செலுத்தினோம். இன்று செங்கோட்டையில் பல சிறப்பு பிரமுகர்கள் உள்ளனர். தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள், துரோண் தீதியின் பிரதிநிதிகள், லக்பதி தீதியின் பிரதிநிதிகள், விளையாட்டு உலகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், தேசத்திற்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது ஒன்றைக் கொடுத்த சிறந்த மனிதர்கள் இங்கே உள்ளனர். ஒரு வகையில், என் கண்களுக்கு முன்னால் ஒரு மினியேச்சர் இந்தியாவை நான் காண்கிறேன். இன்று, செங்கோட்டை தொழில்நுட்பம் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Posts

‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவனை கொன்று சமையலறையில் புதைத்த மனைவி!

‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென…

ஷாக்…மாமியார் வீட்டில் தூணில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட மருமகன்!

மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *