திருச்சி டிஐஜி வருண்குமார் சிபிசிஐடி டிஐஜியாக பணியிடமாற்றம்

திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த நான்கு பேரில் ஒருவராக திருச்சி டிஐஜி வருண்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஊர்க்காவல் படை ஐஜியாக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபியக இருந்த ஆயுஷ்மணி திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக ( ஏடிஜிபி) நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டிஐஜி வருண் குமார், சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

என் மனதிற்கு பிடித்த திட்டம்- நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச்சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை, தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”  நம்முடைய திராவிட மாடல்…

திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால்?… அன்புமணி பரபரப்பு அறிக்கை

ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை அன்புமணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *