
28 ஆண்டுகளுக்குப் பின் புல்லட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்ட்டிற்கு டிஸ்கோ சாந்தி அடியெடுத்து வைத்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் ஆனந்ததின் மகளான டிஸ்கோ சாந்தி 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். கவர்ச்சி நடனத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்த டிஸ்கோ சாந்தி, 1997-ம் ஆண்டுக்குப் பின் திரையுலகை விட்டு ஒதுங்கினார். நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்ட டிஸ்கோ சாந்தி 28 ஆண்டுகளுக்குப் பின் திரையுலகிற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
டைரி படப்புகழ் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், தனது சகோதரர் எல்வினுடன் ‘புல்லட்’ படத்தில் நடித்து வருகிறார். அமானுஷ்ய கதைக்களத்தில் தயாராகும் இப்படத்தில் டிஸ்கோ சாந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். புல்லட் படத்தின் டீசரை எஸ்.ஜே,சூர்யா, பிருத்விராஜ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வெளியிட்டனர்.