அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி

புதுச்சேரியில் அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் உள்ள மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கும் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • Related Posts

    பரபரப்பு… அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக. தலைமை அலுவலகம் உள்ளது. இதற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் மூலம்…

    தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *