நாங்கள் என்ன தற்குறியா? எங்களை ஏன் தொட்டோம்? என்று நீங்க (திமுக)வருத்தப்படுவீங்க..? என்று ஆவேசமாக தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், “நாட்டுக்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே கண்ணா இருந்தார் என்று திமுக-வை மறைமுகமாக சாடினார்.

“நாங்க தற்குறி இல்ல” :-
மேலும், “இந்த தற்குறிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்துதான் வாழ்நாள் முழுக்க, விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்க அரசியலையே கேள்விக்குறியாக்கப் போறாங்க. இவங்க எல்லாம் தற்குறிகள் கிடையாது; தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக்குறி, மாற்றத்திற்கான அறிகுறி என்று பேச…! அரங்கமே அதிர தவெக-வினர் ஆரவாரம் செய்தனர்.

ஃபீல் பண்ணப் போறீங்க :-
“ஏன்டா இந்த விஜயை தொட்டோம். ஏன்டா விஜய்கூட இருக்குற இந்த மக்களை தொட்டோம் என நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணப் போறீங்க” என்று சிரித்துக் கொண்டே நக்கல் தோணியில் பேசினார்.

காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணலை கொள்ளையடித்திருக்கின்றனர். இதன் மூலம் சுமார் ரூ.4730 கோடி வரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

அவங்க-னா திமுக தான்?
“தவெகவுக்கு சப்போர்ட் பண்ற எல்லாரையும் தற்குறிகள்னு சொல்லி நல்லா வாங்கி கட்டிகிட்டு இப்போ அப்படி சொல்லாதீங்கனு ஒரு குரல். அது யாருன்னு பாத்தா.. அவங்க கட்சி (திமுக) எம்எல்ஏ.. நம்ம கொள்கைத் தலைவர் அஞ்சலையம்மாளோட சொந்தக்கார். நம்ம கட்சியில இருந்து தவெகவுக்கு.. ஆதரவுக்குரலானு அவங்க (திமுக) தலைமையே குழம்பிடுச்சு”. என்று பொடி வைத்து விஜய் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கரூர் சம்பவத்திற்கு பிறகு, ஒரு மாதத்திற்கு மேல் அரசியலில் அமைதியாக இருந்தார் விஜய்.
ஆனால், இந்த ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தனது அதிரடியை காட்டி உள்ளார். முன்பே விட திமுக கட்சியை 2-மடங்க விமர்சித்து பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.


