இளையராஜா போட்டோ, பெயரை பயன்படுத்தக் கூடாது:உயர்நீதிமன்றம் அதிரடி!

வர்த்தக ரீதியாக இசையமைப்பாளர் இளையராஜாவின் போட்டோ மற்றும் பெயரை வர்த்தக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடைவிதிக்க கோரி பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், ” பல்வேறு யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் என்னை அடையாளப்படுத்தும் வகையில் எனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது. மேலும் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் “இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்பிங் செய்தும், ஏ.ஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியும் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது”? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர். இது அவரது தனிப்பட்ட உரிமையைப் பாதிக்கும் செயல் என்பதால், யூடியூப் , ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதியின்றி இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது” என்றார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி யூடியூப் சேனல்களுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Related Posts

அரசு பேருந்துகள் மோதி கோர விபத்து – பலி எண்ணிக்கை 11ஐ தாண்டும் என தகவல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கோர விபத்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.…

மீண்டும் கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை மீனாட்சி சவுத்ரி – பாடல் செம வைரல்!

தெலுங்குவில் வெளியான “பீமாவரம் பல்மா” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மீனாட்சி சவுத்ரி ஆடிய நடன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொங்கல் வெளியீடு! வரும் பொங்கல் பண்டிகை யொட்டி தெலுங்கு திரையுலகில் வெளியாக உள்ள “அனகனக ஓக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *