சட்டவிரோத குடியேறிகளை விரட்டுவோம்…பிஹாரில் அமித்ஷா பிரசாரம்

பிஹாரிகளில் உள்ள ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளையும் நாங்கள் விரட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

பிஹாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக நவம்பர் 6-ம் தேதி, 121 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தர்பனில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் , “லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவியின் 15 ஆண்டு கால ஆட்சியின் போது, பிஹாரை பேரழிவிற்கு உட்படுத்திய காட்டாட்சி ராஜ்யத்தை தடுக்க தாமரை சின்னம் இருக்கும் பட்டனை மக்கள் அனைவரும் அழுத்த வேண்டும். 3.60 கோடி மக்கள் ரூ.5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீட்டைப் பெறுகிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தர்பங்காவில் ஐ.டி பூங்கா அமைக்கப்படும். சாத் பண்டிகையை அவமதித்தவர்களை பிஹார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி பிஹார் தேர்தலில் துடைத்தெறியப்படும்.

ராகுல் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஊடுருவல்காரர்களை ஆதரிக்கின்றனர். நாங்கள் ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளையும் விரட்டுவோம். காட்டாட்சி ராஜ்ஜியத்தை துடைத்தெறிய தேஜக கூட்டணிக்கு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்” என்றார்.

 

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *