மழையை அறிய ரூ.10 கோடியில் வாங்கிய மெஷின்கள் எங்கே? – நயினார் நாகேந்திரன் கேள்வி

பருவகால நிலையை அறிய 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக முன்னாள் நிதியமைச்சர் கூறிய டெக்னிக்கல் மெஷின்கள் எங்கே என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி என்பது ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. குடியுரிமை சட்டம் சிறுபான்மையினரை வெளியேற்றும் சட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், எந்த சிறுபான்மையினரும் வெளியேற்றப்படவில்லை. அதேபோல வாக்காளர் சரிபார்ப்பு குறித்தும் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். அதற்கு காரணம் திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது.

ஜூன் மாதம் 6.30 லட்சம் ஏக்கர் பயிர் நடப்பட்டு செப்.,5 ஆம் தேதி அறுவடை செய்வது குறித்து தமிழக முதலமைச்சருக்கு முன்னதாகவே தெரியும். அப்படி தெரிந்திருந்தும் அவர், 60 சதவீதம் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. 40 சதவீதம் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பருவமழை திடீரென்று வந்ததாக கூறுகிறார்.

மேலும் தமிழ்நாடு முன்னாள் நிதியமைச்சர் தியாகராஜன் சட்டமன்றத்தில், பருவகால நிலையை அறிந்து கொள்ள ரூ.10 கோடிக்கு டெக்னிக்கல் மெஷின் வாங்கியதாக தெரிவித்தார். ரூ.10 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்ட அந்த மெஷின்கள் எங்கே? அப்படியென்றால் அப்போதைய நிதியமைச்சர் கூறியது பொய்யா? இல்லை வேளாண்துறை அமைச்சர் சொல்வது பொய்யா” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *