தெலுங்கானாவில் சாதி வெறியால், 9மாத கர்ப்பிணி மருமகளை வெட்டிக் கொன்ற மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.
சாதி மறுப்பு திருமணம்
பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவர்; அதே கிராமத்தைச் சேர்ந்த ராணி என்ற பட்டியலின பெண்ணை காதலித்து வந்தார். சேகரின் வீட்டார் இருவரின் காதலிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை வீட்டு வெளியேறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
கர்ப்பிணி மருமகள் கொலை
இது சேகரின் தந்தை சட்டையாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றும் மனதில் வஞ்சகத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது ராணி 9மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சட்டையா சாதிவெறியால் தனது மருமகளை கோடாரியால் ரத்தம் தெறிக்க, தெறிக்க கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், சட்டையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


