அறிமுக இயக்குநர் ஹரி கே.சுதன் இயக்கத்தில், கன்னியாஸ்திரிகள் பற்றி எடுக்கப்பட்ட “மரியா” படம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. கிறிஸ்துவ மதத்தில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்படம் பாராட்டுக்களையும், எதிர்ப்பைகளையும் பெற்று வருகின்றன.

மரியா படத்தின் கதை?
இளம் வயது பெண்ணாக உள்ள கன்னியாஸ்திரிக்கு ஏற்படும் காதல், காமம் என அந்த பருவத்துக்குரிய உணர்வுகளை அந்த கன்னியாஸ்திரி எப்படி கையாளிக்கிறார்? என்பதுதான் இந்த கதை. இளம் வயதிலேயே கன்னியாஸ்திரி ஆக மாறி, கிறிஸ்துவ மத போதகராக வாழ்ந்து வருகிறார்.

அவர் விடுமுறை நாட்களில் தன்னுடைய தங்கை தங்கி இருக்கும் சென்னைக்கு சென்று அங்கு சிறிது நாட்களில் தங்கி இருக்கிறார்.
அப்போது தங்கையும், தங்கையின் காதலனும் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கிறார்கள் இதனை பார்த்த கன்னியாஸ்திரிக்கும் ஆசை ஏற்படுகிறது.
தானும் காதல், காமம் இல்லறவாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என விருப்பம் ஏற்படுகிறது. இதை கன்னியாஸ்திரி எப்படி கையாளுகிறார்? என்பதை தான் படத்தின் இயக்குநர் சொல்ல வருகிறார்.

கிறிஸ்துவ மதம் – சர்ச்சை
கிறிஸ்துவ மதத்தில் பல கேள்விகள்? இந்த படம் முன் வைத்தாலும்; “மரியா” படத்திற்கு கிறிஸ்துவம் மதத்தை பற்றி பல்வேறு சர்ச்சைகளையும், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விருதுகள் :-
“மரியா” திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. பல உலக திரைப்பட விழாக்களில் மரியா திரைப்படம் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


