பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள வி.ஜே பார்வதியை சக போட்டியாளர்கள் எந்த குறை சொன்னாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களை கோபப்படுத்துவதாக, நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சுவாரசியம் இல்லாத பிக்பாஸ்
கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் “பிக்பாஸ் சீசன்-9” நிகழ்ச்சி தொடங்கியது. இந்த சீசனிலும் விஜய் சேதுபதி தான் தொகுப்பாளர். இந்த சீசனில் பங்கேற்று உள்ள அனைத்து போட்டியாளர்களும் பிரபலம் இல்லாதவர்கள் தான்.
யூடிப் சேனல், இன்ஸ்டாகிராம் பிரபலம் என இளைஞர்களை கூட்டி கொண்டு வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சீசன் சரியில்லை என்று நெட்டிசன்களும், பார்வையாளர்களும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். இந்த சீசன் சுவாரசியம் குறைவாக தான் உள்ளது.

மதுரை வி.ஜே. பார்வதி
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள மதுரையை சேர்ந்த வி.ஜே.பார்வதியின் செயல்கள், நடவடிக்கைகள் மீது சக போட்டியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள்.
அது..? இது..? என்று அடிக்கடி புகார்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும், பார்வதி இதனை கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலைகளை மட்டும் செய்து வருகிறார்.
இது சக போட்டியாளர்களை கோவப்படுத்தி உள்ளது. பார்வதி செய்வது முறையில்லை என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
விஜய் சேதுபதியின் குற்றச்சாட்டு:-
வார இறுதி நாட்களில், போட்டியாளர்கள் முன் ஆஜராகும் விஜய் சேதுபதியும், வி.ஜே. பார்வதியிடம் இதனை சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.


