இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயிண்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக உள்ள இன்பநிதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக அவர் நடிப்பு பயிற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

யார் இந்த இன்பநிதி?
தற்போதைய தமிழக முதல்வரான மு.க. ஸ்டாலினின் பேரன்; துணை முதல்வரும், நடிகருமான உதயநிதியின் மகன் வெளிநாட்டில் கல்வி பயின்று தற்போது ரெட் ஜெயிண்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் பட முதன்மை அதிகாரியாக உள்ளார். சமீபத்தில் தனுஷ் இயக்கி, நடித்த “இட்லி கடை” படத்தை விநியோகம் செய்வது இன்பநிதி தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த படமும் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

சினிமா ஹீரோவா..?
இந்நிலையில் தனது தந்தை உதயநிதி பாணியை பின்பற்றி பட விநியோகம் என ஆரம்பித்து, தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் தான் இயக்குநர்:-
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான “மாமன்னன்” படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், இன்பநிதி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இன்பநீதி தனியாக நடிப்பு பயிற்சி எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

நடிப்பு நோ சொன்ன உதயநிதி:-
இன்பநிதியின் அப்பாவான, உதயநிதி தான் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டதில் இருந்து சினிமா படங்களில் நடிப்பதை தற்போது நிறுத்திக் கொண்டுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.



