தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை- சூறாவளி காற்று வீசும்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில், செப்டம்பர் 20-ம் தேதி வரை, இடி, மின்னலுடன், மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

மேலும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், அரியலுார், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை(செப்டம்பர் 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், மணிக்கு, 40 முதல் 50 கி.மீ  வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Posts

கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள்தண்டனை- உ.பி அரசு வினோத உத்தரவு

மனிதர்களை இரண்டாவது முறையாக கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு ஒரு விநோத உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் தெருநாய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வகிறது. இந்த நிலையில், தெருநாய் பிரச்னையை கையாள உச்ச நீதிமன்றம்…

பாமகவில் நடக்கும் அப்பா – மகன் சண்டை கட்சிக்கா? பணத்திற்கா?

தமிழக அரசியலில், தற்போது பரபரப்பாக பேசப்படும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணியை பாமகவில் இருந்து முழுவதுமாக நீக்கியது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும், அக்கட்சியின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *