அஜித் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த இளையராஜா- பின்னணி என்ன?

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் நீக்கப்பட்டுள்ளது. காபிரைட் பிரச்னை தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியானது. கேங்ஸ்டராக அஜித் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. தனது அனுமதி இல்லாமல் குட் பேட் அக்லி படத்தில் இப்பாடல்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, இளையராஜா தரப்பில் இருந்து ரூ.5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரப்பட்டது. மேலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இளையராஜா சார்பில் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தின் மீது காப்பி ரைட் மீறல் சட்டத்தின் கீழ் இளையராஜா வழக்குத்  தொடர்ந்திருந்தார். இதற்கிடையே இந்த திரைப்படம் கடந்த மே 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் திடீரென குட் பேட் அக்லி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இளையராஜா தொடுத்த வழக்கு காரணமாக இந்த படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Related Posts

பரபரப்பு… தவெக தலைவர் விஜய் வீட்டுக்குள் புகுந்த மர்மநபரால் ஆடிப்போன பாதுகாவலர்கள்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீட்டிற்குள் மர்மநபர் திடீரென புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் பங்களா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ளது. இந்த…

நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் அறிமுகமானவர் ரோபோ சங்கர். நடிகர் விஜய்யுடன் புலி,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *