
2025-26-ம் ஆண்டிற்கான வருமானவரி அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
2025-26-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (அதாவது, 2024-25 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன், படிவம் 16, படிவம் 26AS, AIS , PAN அட்டை, ஆதார் அட்டை , முதலீட்டுச் சான்றுகள் (வங்கி வைப்புத்தொகை, PPF, மூலதன ஆதாய அறிக்கை), வீட்டுக் கடன் வட்டிச் சான்றிதழ், மற்றும் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய ரசீதுகள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
வருமான வரித்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்துவரும் நிலையில் தொழில்நுட்ப சிக்கல்களால் அவதியடைந்துள்ளனர். வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும். ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.