சட்டமன்றத் தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி – நடிகர் விஜய்!

2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியே தவெக மற்றும் திமுக இடையே தான் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் நடிகர் விஜய் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிமீ தூரம் சத்தம் கேட்கும். சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். இறந்து போன மிருகங்களை சிங்கம் தொட்டுகூட பார்க்காது. காட்டில் எல்லை வகுத்து காட்டையே தனது கட்டுப்பாட்டில் சிங்கம் வைத்திருக்கும். சிங்கம் அவ்வளவு சீக்கிரம் யாரையும் தொடாது, தொட்டால் விடாது. சிங்கம் தனியே வரவேண்டும் என்று நினைத்தால் தனியே வந்து அத்தனைக்கும் தண்ணீ காட்டும். சிங்கம் எப்போதுமே சிங்கம் தான். மதுரை என்றால் வீரம் தான். மதுரை என்றாலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் நினைவுக்கு வரும். மதுரை உணர்வு பூர்வமான மண். இந்த மண்ணில் வாழ்பவர்களும் உணர்வுபூர்வமானவர்தான்.

மதுரைக்கு வந்தவுடன் என் மனதில் எம்.ஜி.ஆர். தான் ஓடிக்கொண்டிருந்தார். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரை போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் பழக எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே?

ஒரு எம்.பி தொகுதி கூட கிடைக்கவில்லை என்று தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு, கீழடியில் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் மறைத்து விட்டது. மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற மதுரையில் இருந்து மாஜகவுக்கு சொல்வது என்னவென்றால், உங்கள் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்?

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருகிறது. ஒரே ஒரு உதவி மட்டும் பாஜக அரசு செய்ய வேண்டும். அது என்னவென்றால், கச்சத்தீவை மீட்டு தாருங்கள். நாங்கள் பார்த்து கொள்கிறோம். மாணவர்கள் உயிரை பறிக்கும் நீட் வேண்டாம். அதை ரத்து செய்யுங்கள். மிஸ்டர் மோடிஜி, மைனாரிட்டி அரசு நடத்தும் நிலையில், அடிமை, குடும்ப ஆட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா?. தாமரை இலையில் தண்ணீரே நிற்காது. பிறகு எப்படி தமிழக மக்கள் நிற்பார்கள். பாஜக தான் எங்கள் கொள்கை எதிரி. திமுக தான் எங்கள் அரசியல் எதிரி. இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. 2026ல் போட்டியே தவெக மற்றும் திமுக இடையே தான். மக்கள் நலனுக்காக திமுக போராடவில்லை. மை டியர் ஸ்டாலின் அங்கிள் இதைப் பற்றி கூறுவாரா?. எனவே தமிழ்நாட்டு மக்கள் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள்.. செய்வீர்கள் தானே?

கட்சித் தொடங்க முடியாது என்றார்கள். தொடங்கி விட்டோம். மாநாடு நடத்த முடியாது என்றார்கள். நடத்திக் காட்டிவிட்டோம். அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியாது என்கிறார்கள். ஆட்சயைப் பிடித்து காட்டட்டுமா? நமக்கு ஒரே கொள்கை எதிரி, ஒரே அரசியல் எதிரி பாஜக தான். ஒரே அரசியல் எதிரி திமுக தான். கூட்டணி வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சி நமது தவெக அல்ல. மாபெரும் இளைஞர்கள் நம்முடன் இருக்கிறார்கள். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. நமது கொள்கைல் எந்த சமரசமும் இல்லை. இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கான வேட்டகாவும் மாறும் என்று பேசினார்.

Related Posts

தவெக தலைவர் விஜய் சிங்கம் தான், ஆனால்,: சீமான் கிண்டல்!

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக…

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *