
தன் காதலியை 7 துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி தெருவில் வீசிய காதலன் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஜான்சி மாவட்டததில் உள்ள டோடி ஃபதேபூர் காவல் நிலையப் பகுதியில் ஆகஸ்ட் 13-ம் தேதி ஒரு சாக்கு மூட்டை தெருவில் கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சாக்குமூட்டையை பிரித்துப் பார்த்த போது அதிர்ந்து போனார்கள். அதன் உள்ளே பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது.
இதையடுத்து கொலை செய்யப்பட்டது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது காலை செய்யப்பட்டவர் திகம்கர் பகுதியைச் சேர்ந்த ரச்னா யாதவ் என்பது தெரிய வந்தது. திருமணமான ரச்னா யாதவை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது தகாத உறவால் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம், மஹேவா கிராமத்தைச் சேர்ந்த பிரதான் சஞ்சய் படேல் என்பவருடன் ரச்னா யாதவிற்கு பழக்கம் இருந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது. அவரை நேற்று போலீஸார் சுற்றி வளைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, ரச்னா யாதவிற்கும் தனக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும், இதனால் நெருங்கிப் பழகினோம் என்று கூறிய பிரதான் சஞ்சய் படேல், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரச்னா யாதவ் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். தனது மருமகன் சந்தீப் படேல், பிரதீப் அஹிர்வார் ஆகியோருடன் சேர்ந்து ரச்னாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை 7 துண்டாக வெட்டி சாக்கில் வைத்து தெருவில் வீசினோம் என்றார்.
இதையடுத்து பிரதான் சஞ்சய் படேல், சந்தீப் படேல் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான பிரதீப் அஹிர்வாரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். காதலியை காதலனே கழுத்தை நெரித்துக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஜான்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.