மோடியுடன் நெருக்கமாக இருக்கிறேன்…ஆனால்?: மனம் திறந்த டிரம்ப்!
நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். அத்துடன் இந்தியப் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக பிரிட்டன்…
அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு- 3 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு
பென்சில்வேனியாவில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவில் உள்ள தென்கிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள யார்க் கவுண்டில் உள்ள கோடோரஸ் டவுன்ஷிப்பிற்கு காவல் பணிக்கு அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி மர்மநபர்…
டிரோன் தாக்குதலில் வெனிசுலா படகில் இருந்த 3 பேர் பலி – டிரம்ப் வெளியிட்ட வீடியோ
போதைப்பொருள் ஏற்றி வந்ததாக வெனிசுலா படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட நாளாக…
இந்தியாவுக்கும், எங்களுக்குமான உறவை கெடுக்கும் டிரம்பின் முயற்சி தோல்வியடையும்- ரஷ்யா பதிலடி!
இந்தியா, ரஷ்யா இடையே உள்ள உறவுகளைத் தொந்தரவு செய்யும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியடையும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் வாயிலாக, உக்ரைனுக்கு எதிரான அந்நாட்டின் போருக்கு…
ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை- சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி
ரஷ்யாவில் உள்ள கம்சட்கா தீபகற்பகத்திற்கு அருகே இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பம் மிகத் தீவிர நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு 1952-ம் ஆண்டு …
ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு- இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா வாக்களித்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு கொண்டு இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் நியூயார்க் பிரகனத்தை ஆதரித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீது ஐ.நா…
நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் பதவியேற்பு- இரவு நடந்த அதிரடி திருப்பம்
நேபாளத்தில் நடைபெற்ற வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். இந்த நிலையில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். நேபாள நாட்டில் ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்கள்…
ஏமன் தலைநகரில் வங்கி, மருத்துவமனை மீது இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல்- 35 பேர் பலி
ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 118 பேர் காயமடைந்தனர் மேற்கு ஆசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. ஹவுதி படையினர்…
வெளிநாட்டு பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு- மு.க.ஸ்டாலின் தகவல்
ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி…
நள்ளிரவில் பள்ளத்தாக்கில் பாய்ந்த சுற்றுலா பேருந்து- 15 பேர் உயிரிழப்பு!
கொழும்பு அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கொழும்பில் உள்ள டங்கல்லே நகராட்சி மன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர்.…










