கல்லறை திருநாளில் ஆசிரியர்கள் எப்படி தேர்வுக்குச் செல்வார்கள்? – ஈபிஎஸ் கேள்வி

கல்லறை திருநாளில் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக அரசு, நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.

ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆக.13) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு மற்றும் அதனை…

என் மனதிற்கு பிடித்த திட்டம்- நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடிச்சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை, தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”  நம்முடைய திராவிட மாடல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *