கனமழை எதிரொலி: 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கனமழை எதிரொலியாக 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை, புயல் சின்னம் எதிரொலியாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதைபோல பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

அரசு பேருந்துகள் மோதி கோர விபத்து – பலி எண்ணிக்கை 11ஐ தாண்டும் என தகவல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். கோர விபத்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.…

மீண்டும் கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை மீனாட்சி சவுத்ரி – பாடல் செம வைரல்!

தெலுங்குவில் வெளியான “பீமாவரம் பல்மா” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மீனாட்சி சவுத்ரி ஆடிய நடன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொங்கல் வெளியீடு! வரும் பொங்கல் பண்டிகை யொட்டி தெலுங்கு திரையுலகில் வெளியாக உள்ள “அனகனக ஓக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *