பிஹார் சட்டமன்றத்திற்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(நவம்பர் 6) காலையிலேயே விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.
பிஹாரில் முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த முதல் கட்டத் தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 1,191 ஆண்கள், 122 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளர்கள் அடங்குவர். முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மற்றும் எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் (இந்தியா கூட்டணி) இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. பிஹாரில் இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகுள் நவம்பர் 14-ம் தேதி எண்ணப்படுகின்றன.


