சென்னையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சூளைமேடு, அமைந்தகரை, நெற்குன்றம் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருபவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
சென்னை கோயம்பேட்டில் வசித்து வரும் சவுதி என்பவரின் வீட்டிலும், நெற்குன்றத்தில் சிகை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ் என்பவரின் வீட்டிலும், சூளைமேட்டில் மேதா நகரில் உள்ள ஒருவரின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் அடிப்படையில் இந்த ரெய்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒரே நாளில் 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


