நடிகரும், இயக்குநருமான பிரதீப், நடிகை மமிதாவை காதலித்து வருவதாக கிசுகிசு வெளியாகி உள்ளது.

இந்தாண்டு தீபாவளியை ஒட்டி வரும் 17ம் தேதி “DUDE” படம் வெளியாக உள்ளது. பிரதீப் – மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா-விடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்திஸ்வரன் ‘டியூட்’ படத்தை இயக்கி உள்ளார். வைரல் இசையமைப்பாளரான ‘சாய் அபயங்கர்’ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் பாராட்டுகள்; வரவேற்பு :-
“DUDE” படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதேசமயம் இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் பெரும் வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தில் “DUDE” படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். ஆனால் நடிகை மமிதா பைஜூ கலந்து கொள்ளவில்லை.

மமிதா மனதில் இருக்கிறார்!
நிகழ்ச்சியில், ரசிகர்கள் மத்தியில் பிரதீப் ரங்கநாதன் பேசினார். அப்போது ரசிகர்கள் “படத்தின் ஹீரோயின் மமிமா எங்கே..?” என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரதீப் ரங்கநாதன் “அவர் என் மனதில் இருக்கிறார்..!” என்று குஷியாக பதிலளித்தார்.

காதல் கிசு.. கிசு..!
பிரதீப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வேளை பிரதீப் -மமிதா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து விட்டதாகவும் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது…!




