ரஜினியின் கூலி படத்தினை விட ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின் முன்கதையாக ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளில் இருந்தே ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் நல்ல வசூலையும் செய்து வருகிறது.
இதுவரை உலகளவில் ரூ. 415 கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் செய்துள்ளது. உலகளவில் வசூல் வேட்டையை செய்து வரும் ‘காந்தாரா: சாப்டர் 1’ கேரளாவில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதன்படி, கேரளாவில் மட்டும் இப்படம் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ கூலி’ படத்தின் கேரள வசூலை விட ‘காந்தாரா: சாப்டர் 1’ அதிக வசூல் செய்துள்ளது.
ஏனெனில், கேரளாவில் ‘கூலி’ திரைப்படம் ரூ. 25.5 கோடி தான் வசூல் செய்திருந்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பட வசூலை ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ கேரளாவில் தகர்த்துள்ளது. இப்படம் கன்னடத்தில் ரூ.76 கோடி, தமிழில் ரூ.24,75 கோடி, தெலுங்கில் ரூ.52.65 கோடி, மலையாளத்தில் ரூ.26 கோடி, இந்தியில் ரூ.82 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


