மதுரையில் அக்டோபர் 12-ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள், குழந்தைகள்,
கலந்து கொள்ள போலீஸார் தடை விதித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக மக்களைச் சந்தித்து ஆதரவை திரட்ட தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
மதுரையில் அக்டோபர் 12-ம் தேர்தல் பிரச்சார பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ளார். இந்த துவக்க நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பதுடன் மோடி அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிக்க உள்ளனர்.
நயினார் நாகேந்திரன் மேற்கொள்ளும் இந்த பிரச்சாரத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள் வர போலீஸார் தடை விதித்துள்ளனர். அத்துடன் நிகழ்வில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகளுடன் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.


