
காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 19) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி- காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் இன்று இரவு இடி- மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.