பாஜக கூட்டணியில் தேமுதிகவா?- எல்.கே.சுதீஷ் பதில்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிலளித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, ஜி.கே.மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றிருந்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் எல்.கே.சுதீஷும் பங்கேற்றதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியில் தேமுதிக இடம் பெறுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அப்போது பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்று கேள்விக்கு, நட்பின் காரணமாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக எல்கே.சுதீஷ் பதில் அளித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிகவிற்கு நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அந்த கட்சி அதிருப்தியில் உள்ளது. அத்துடன் திமுகவுடன் நட்புறவுடன் உள்ளது. சட்டமன்றத் தர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

அதிமுகவில் ஏற்பட்ட பிளவிற்கு திமுக தான் காரணம்… நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் திமுக தான் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செங்கோட்டையனை இயக்குவது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையா…

அதிகாலை துயரம்…. தோட்டத் தொழிலாளியை அடித்துக் கொன்ற காட்டுயானை!

கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி இன்று அதிகாலையில் வேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். நீலகிரி மாவட்டம், கூடலூரில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்த யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *