கோவை:
ஜியோ நியூஸ் தமிழ் தொடர்ந்து எழுப்பி வரும் அடுக்கடுக்கான நிதி மற்றும் சட்ட விதிகளின் மீறல் புகார்களுக்கு முறையான விளக்கம் அளிக்க முடியாத கோவையைச் சேர்ந்த ‘VK Promotion’ நிறுவனத்தின் உரிமையாளர் வெற்றி, தற்பொழுது புதுச்சேரி கடற்கரையில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு மக்களை திசைதிருப்ப முயல்வது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய், அமைச்சர் செங்கோட்டையன் பெயர்கள் துஷ்பிரயோகம்?
பண மோசடி மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) விதிமீறல் புகார்களுக்கு உள்ளாகியுள்ள த.வெ.க பிரமுகர் வெற்றி, தனது விளம்பர சுயநலத்திற்காகத் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் பெயரைப் பயன்படுத்துவதும், முந்தைய செய்திகளில் அமைச்சர் செங்கோட்டையன் பெயரைச் சொல்லிப் பத்திரிகையாளருக்குக் கொலைமிரட்டல் விடுத்ததும் தமிழக அரசியல் மற்றும் ஊடக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்குச் சட்டப்படியான தகுந்த ஆதாரங்களை நீதிமன்றத்திலோ அல்லது ஊடகங்கள் முன்னிலையிலோ காட்ட தகுதியற்ற இந்த நபர், த.வெ.க தலைவர் விஜய் அரசியல் மாநாட்டில் பேசிய, “நீங்க என்னப் பற்றிப் பேசிக்கொண்டே இருங்கள், அப்பொழுதுதான் நான் மேலே வருவேன்” என்ற வசனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ‘விக்டிம் கார்டு’ நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். அரசியல் தலைவர்களின் பெயரையும், வசனத்தையும் கேடயமாகப் பயன்படுத்தித் தனது வணிக மோசடிகளை மறைக்க முயல்வது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
பாண்டிச்சேரியில் 20-ஆவது கிளையா? முகவரி எங்கே?

தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோவில், புதுச்சேரியில் தங்களது 20-ஆவது கிளையைத் (Franchise) தொடங்குவதாகக் கூறி, சொகுசு காரில் வலம் வந்து ஆடம்பரம் காட்டியுள்ளார் வெற்றி. தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரி வரை தனது கிளைகளைப் பரப்பும் அளவிற்கு அது சட்டப்பூர்வமான நிறுவனம் என்றால், அந்தப் புதிய கிளையின் அதிகாரப்பூர்வ முகவரி மற்றும் அரசு உரிமத்தின் ஆவணங்களை ஏன் இதுவரை பொதுவெளியில் வெளியிடவில்லை? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகக் கடற்கரையில் நின்று கொண்டு, வெறும் வாயில் வடை சுடுவது போல “20-ஆவது கிளை” என்று மழுப்பலாகப் பேசுவது, இவர்களின் பிரான்சைஸ் பிசினஸ் என்ற பெயரில் நடக்கும் நெட்வொர்க் நிதி வசூலின் அடுத்தகட்ட மோசடி வலையோ என்ற பலத்த சந்தேகத்தைப் பொதுமக்கள் மத்தியில் விதைத்துள்ளது.
வீடியோக்களை அவசர அவசரமாக அழிப்பது ஏன்?
ஜியோ நியூஸ் தமிழ் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, கட்டுக்கட்டாகப் பணம் வைத்துள்ள வீடியோக்கள் குறித்துக் கேள்வி எழுப்பத் தொடங்கியதுமே, தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த பல “ஆதார வீடியோக்களை” அவசர அவசரமாக ‘VK Promotion’ நிறுவனம் நீக்கியுள்ளது . தப்பு செய்யவில்லை என்றால் ஆதாரங்களை ஏன் அழிக்க வேண்டும்? தற்போதைய புதிய வீடியோ மூலம் பழைய குற்றங்களை மறைக்கத் துடிப்பது ஏன்?
உளவுத்துறை, காவல்துறை, அமலாக்கத்துறைக்கு விடுக்கப்படும் அவசரக்கோரிக்கை:
தமிழகத்தில் ஏற்கனவே ஆருத்ரா, நியூமேக்ஸ் போன்ற போலி நிதி நிறுவனங்கள் இதேபோல் ஆடம்பரக் கார்கள், அரசியல் செல்வாக்கு மற்றும் சமூக வலைதள விளம்பரங்களைக் காட்டிப் பொதுமக்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டிய வரலாறு நமக்கு உண்டு.
அதே போன்ற ஒரு பேராபத்து ‘VK Promotion’ நிறுவனத்தின் மூலமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு மீண்டும் ஏற்படுவதற்கு முன்பாக:
தமிழக மற்றும் புதுச்சேரி காவல்துறையின் உளவுத்துறை (Intelligence Bureau) VK Promotion நிறுவனத்தின் கிளைகள் மற்றும் உரிமையாளர் என கூறும்த.வெ.க. பிரமுகர் வெற்றி பின்னணியை உடனடியாகக் கண்காணிக்க வேண்டும்.
மத்திய அமலாக்கத்துறை (ED) இவர்களின் ரூ. 5 லட்சம் பிரான்சைஸ் கட்டணப் பணப் பரிவர்த்தனைகள் குறித்துத் தனி கவனம் செலுத்தி விசாரிக்கத் தயாராக வேண்டும்.
உள்ளூர் காவல்துறை பத்திரிகையாளருக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல் மற்றும் இந்த நிதி நிறுவனத்தின் உண்மைத் தன்மை குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீர விசாரிக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அவசரக் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
மக்களின் குரலுக்குக் களம் கொடுக்கும் ஜியோ நியூஸ் தமிழ்!
‘VK Promotion’ நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இது குறித்துக் கூடுதல் விவரங்கள் அறிந்தவர்கள், தங்களின் தகுந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் ஜியோ நியூஸ் தமிழ் செய்திப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். பாதிக்கப்படும் மக்களின் குரலை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் என்றும் தயாராக உள்ளோம். (ஆதாரங்கள் அளிப்போரின் விவரங்கள் முற்றிலும் இரகசியமாக வைக்கப்படும்).

More Stories
கணவர் – அக்காவை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பெண்…
சிறுமிக்கு மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை …
ஓடும் பேருந்தில் இளம் பெண்ணை வீடியோ எடுத்த முதியவர்கள் இருவர் கைது…