சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் ஒருவர் (வயது 27) இவர் காரைக்குடியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார் இவர் பணி முடித்து இரவு அரசு நகரப் பேருந்தில் (டவுன் பஸ்) வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இளம் பெண்ணின் இருக்கையின் பின்புறம் இருந்த இருவர் இளம் பெண்ணை செல்போனில் படம் பிடித்தனர் .இதை கவனித்துவிட்ட இளம் பெண்ணுக்கும் படம் பிடித்தவர்களுக்கும் ஓடும் பேருந்தில் கேட்ட பொழுது தகராறு ஏற்பட்டது.
இதனால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை பள்ளத்தூர் காவல் நிலையம் முன்பு நிறுத்தினார் . பள்ளத்தூர் காவல் நிலையத்தில் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்து தகராறு செய்த ராங்கியம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்( வயது 54), அடைக்கப்பன் (வயது 58) ஆகிய 2 மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More Stories
சிறுமிக்கு மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை …
பாண்டிச்சேரியில் புதிய கிளையா? முகவரியை மறைப்பது ஏன்? ‘VK Promotion’ வெற்றியின் வீடியோ மழுப்பல்! காவல்துறை, அமலாக்கத்துறைக்குச் சமூக ஆர்வலர்கள் அவசரக் கோரிக்கை!
VK Promotion’ நிறுவனத்தின் அடுத்த மெகா மோசடி அம்பலம்! கட்டுக் கட்டாகப் பணம்; முதல்வர் விஜய் படம் துஷ்பிரயோகம்! அமலாக்கத்துறை பாயுமா?