கோவை விமான நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். கேரளம் மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கடங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சப்பன். இவரது மகள் அஞ்சிதா (32). இவர், கோவை விமான நிலையத்தில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா பிரிவில் சிவில் இன்ஜினியரிங் மேலாளராக பணியாற்றி வந்தார். இதற்காக கோவை பீளமேடு பகுதியில் உள்ள விமான நிலைய குடியிருப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், நள்ளிரவு, அஞ்சிதா தனது குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் மூலம் தனது வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட் மற்றும் செல்போன் லாக் எண்கள் ஆகியவற்றை அனுப்பியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதற்கிடையில், 7ம் தேதி அஞ்சிதாவுடன் பணியாற்றும் சிவில் பிரிவு டி.ஜி.எம்., போனி பாஸ்டியன் என்பவர் அஞ்சிதாவின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் அவர், அஞ்சிதாவின் சகோதரர் அகில் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அஞ்சிதா அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார், அஞ்சிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனியாக வசித்து வந்த அஞ்சிதா கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Stories
திருப்புவனம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது கும்பல்:
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய் நாளை பதவியேற்பு விழா
தென்னிந்திய நடிகர் நடிகைகளுக்கு பாலிவுட்டில் மரியாதை கிடையாது: நடிகை சிம்ரன் வேதனை…