உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் பணியில் சேர்ந்த வெறும் 45 நாட்களிலேயே இளம் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, அவரை காவல்துறையில் இருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
33 வயதான விவேக் குமார், கடந்த 2025 ஜூன் மாதம் காவல்துறையில் இணைந்து பயிற்சியை முடித்தார். அதன்பின், 2026 ஏப்ரல் 24 அன்று ஷாஜஹான்பூரின் ஜெய்திபூர் காவல் நிலையத்தில் தனது முதல் பணியைத் தொடங்கினார். பணியில் காட்டிய சுறுசுறுப்பின் காரணமாக, காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அஸ்வினி குமாரின் மெய்க்காப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜெய்திபூர் பகுதியில் பதிவான கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரிடம், வழக்கை சுமுகமாக முடித்துத் தருவதாகக் கூறி விவேக் குமார் பணம் கேட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காவல் நிலைய வளாகத்திலேயே ரகசியமாக வலை விரித்தனர். அங்கு ரூ.35,000 லஞ்சத் தொகையை பெற்றுக் கொண்டபோது, மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை செய்து மிரட்டல்: தென்காசி கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
ரேஷன் கடைகளில் கிலோ ரூ.15-க்கு கோதுமை மாவு: தமிழக அரசு அதிரடி முடிவு!