உடுமலை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி…

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடத்தூரை சேர்ந்த தேங்காய் பறிக்கும் தொழிலாளர்கள் தினேஷ் (17), சபரி (16), பாலபிரகாஷ் (26) குணசேகரன் (16) ஆகியோர் இரவு பைக்கில் கணியூர் வழியாக மடத்துக்குளம் சென்று கொண்டிருந்தனர். அப்போது மடத்துக்குளம்- காரத்தொழுவு ஆஸ்பத்திரி மேடு என்ற இடத்தில் வந்தனர். அப்போது மடத்துக்குளத்தில் இருந்து கணியூர் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக பைக்கில் மோதியது.

இதில் பைக்கில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 3 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதில் படுகாயமடைந்த குணசேகரன் உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.