September 10, 2026

நண்பகல் 3 மணி மதுரை மாவட்ட வாக்கு பதிவு நிலவரம்…

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், 3 மணி நிலவரப்படி 67.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. திருமங்கலம் தொகுதியில் அதிகபட்சமாக 73.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுரை வடக்கு தொகுதியில் குறைந்தபட்சமாக 60.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற தொகுதிகளான மதுரை மேற்கு (65.80%), மதுரை கிழக்கு (66.44%), சோழவந்தான் (72.19%), திருப்பரங்குன்றம் (68.06%), மேலூர் (68.76%), மதுரை தெற்கு (65.52%), உசிலம்பட்டி (67.42%) மற்றும் மதுரை மத்தி (61.46%) ஆகியவற்றிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தல் மிகவும் உற்சாகமான தேர்தல். யாருக்கு ஒட்டு என பயங்கரமான எதிர்பார்ப்பு இருந்தது. நம் ஊரில் மட்டுமல்ல, வெளிநாட்டில் கூட இருந்து கிளம்பி வருகிறார்கள். நிறைய பேருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது. வாக்கு சதவீதம் நன்றாக இருக்கிறது என கேள்விப்படும்போது சந்தோஷமாக இருக்கிறது. அனைவரும் வந்து வாக்களியுங்கள். உங்களுக்கு யார் மேல் நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு ஒட்டு போடுங்கள்.

You may have missed