இன்று காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தில் புதுமண தம்பதி திலிப்குமார் – சினேகப்ரியா ஆர்வத்துடன் வாக்களித்தனர். மேலும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் – அபிராமி தம்பதியும் மணக்கோலத்தில் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் சங்கரதாஜ் – பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வேங்கிக்கால் அரவிந்தன் – ஆர்த்தி தம்பதியும் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சுபாஷ் – கனிமொழி தம்பதியும், சென்னை மேடவாக்கத்தில் சுரேஷ் – சரண்யா தம்பதியும் திருமணமான உடனே ஜோடியாக வந்து வாக்களித்தனர். காஞ்சிபுரத்தில் ரவி ராகுல் – சிவரஞ்சனி, சேலம் வலசையூரில் அஜித் – ஜெயக்குமாரி தம்பதியும் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர்.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் பாலாஜி நகரை சேர்ந்த தினேஷ்குமார் – புவனேஸ்வரி. இருவரும் முதுகலை பட்டதாரிகள். இவர்களுக்கும் இன்று காலையில் பொழிச்சலூரில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருவதுயொட்டி திருமணம் முடிந்த புதுமண தம்பதியினர் மனக்கோலத்திலேயே பொழிச்சலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இருவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை நிறைவு செய்தனர்.

More Stories
திருக்கல்யாண விருந்தில்… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…
நண்பகல் 3 மணி மதுரை மாவட்ட வாக்கு பதிவு நிலவரம்…
வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க தவெக தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை…