சென்னை:
பொதுமக்கள் முன்பதிவு செய்த வெறும் 4 மணி நேரத்திற்குள் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் புதிய திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
பொதுவாக வீடுகளுக்கு வழங்கப்படும் 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் முன்பதிவு செய்த நாளில் இருந்து விநியோகம் செய்யப்படுவதற்கு 3 முதல் 4 நாட்கள் வரை ஆகிறது. வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தேவையை விரைவாக பூர்த்தி செய்யும் நோக்கில், ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ என்ற பெயரில் 10 கிலோ எடை கொண்ட புதிய ‘காம்போசிட்’ ரக சிலிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் எடைக் குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலிண்டரை முன்பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள்ளாகவே நுகர்வோரின் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்யும் வசதி கடந்த ஜூலை மாதம் முதல் முதற்கட்டமாக கோவையில் நடைமுறைக்கு வந்தது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விரிவாக்கம்:
இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கும் இந்த அதிவிரைவு சிலிண்டர் விநியோக சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி?
இந்த 4 மணி நேர விரைவு சிலிண்டர் சேவை தேவைப்படும் வாடிக்கையாளர்கள், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி (IndianOil ONE App) வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!