April 16, 2026

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்பட பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், நடிகைகள் பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் பெரும் பரபரப்பு  நிலவி வருகிறது.